விக்னேஷ் சிவன், சூர்யா படம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக்கா?

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (16:16 IST)
விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து இயக்கும் படம் இந்திப் படமொன்றின் ரீமேக் என்றுதான் முதலில் அந்த கிசுகிசு ஆரம்பமானது. அடுத்த நாளே படத்தின் பெயர் ஸ்பெஷல் 26 என்றனர். இது அக்ஷய் குமார், காஜல் அகர்வால் இந்தியில் நடித்து வெற்றி பெற்ற படம்.
 


விக்னேஷ் சிவன் இந்திப் படத்தை ரீமேக் செய்வதிலும், அதில் சூர்யா நடிப்பதிலும் ஆச்சரியமில்லை. ஆனால், இந்த விஷயத்தில் ஒரு சின்ன சிக்கல். இந்தி குயின் படத்துடன், ஸ்பெஷல் 26 படத்தின் நான்கு மொழி ரீமேக் உரிமையை வாங்கியிருப்பவர் தியாகராஜன். அவரது மகன் நடிகர் பிரசாந்துக்காக வாங்கப்பட்டதுதான் இந்த ரீமேக் உரிமை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் பிரசாந்த் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போவதாக சொல்லப்பட்டுவரும் நிலையில்தான் இப்படியொரு இடைச்செருகல் செய்தி.
 
யாராவது உண்மையை விளக்குங்களேன்.
அடுத்த கட்டுரையில்