நாயகி வெற்றி தருமா?

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (15:47 IST)
த்ரிஷா நடித்திருக்கும் நாயகி மையப்படம் நாயகி. தமிழ், தெலுங்கில் தயாரான இந்தப் படம் தெலுங்கில் மட்டும் வெளியானது. ஆனால், அங்கு படம் சரியாகப் போகவில்லை.
 
 
இந்நிலையில், தமிழில் நாயகி வெற்றி தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
நாயகி படத்தின் கதை இரண்டு காலகட்டங்களில் நடக்கிறது. அதில் எண்பதுகளில் கதை நடக்கும் பகுதி முக்கியமானது. அதில் இருபது வயது இளம் பெண்ணாக த்ரிஷா வருகிறார். அதற்காக உடல் எடையை அவர் குறைத்துக் கொண்டார்.
 
நாயகியின் முக்கியமான விஷயம், த்ரிஷா முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் படம் இது.
 
அனுஷ்காவும், நயன்தாராவும் நாயகி மையப்படங்களில் பட்டையை கிளப்புகையும் அதே வெற்றி தனக்கும் அமையுமா என்று எதிர்பார்க்கிறார் த்ரிஷா.
 
எல்லாம் ரசிகர்கள் கையில்.
அடுத்த கட்டுரையில்