இதுலாம் நம்புற மாதிரியா இருக்கு?... அஜித் 62 பற்றி புருடா விட்ட விக்னேஷ் சிவன்!

சனி, 15 ஏப்ரல் 2023 (15:40 IST)
அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க,விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்துக்காக விக்னேஷ் சிவன் உருவாக்கிய திரைக்கதை லைகா மற்றும் அஜித் தரப்புக்கு பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் அந்த படத்தில் இருந்து அவரை நீக்கி மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்து ப்ரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் விக்னேஷ் சிவன் ‘நான் சொன்ன கதை அஜித் சாருக்கு பிடித்திருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு உடன்பாடு இல்லை. அதனால் நான் விலகவேண்டியதாயிற்று’ எனக் கூறியுள்ளார். இதைப் பார்த்து இப்போது ட்ரோல்கள் விக்னேஷ் சிவனுக்கு எதிராக உருவாகியுள்ளன. ”அஜித் ஒரு கதைக்கு சம்மதம் சொன்ன பிறகு அதை தயாரிப்பு நிறுவனம் பிடிக்கவில்லை என சொல்லுமா? சும்மா புருடா விடாதீங்க விக்கி” எனக் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்