விறுவிறுப்பாக நடந்து வரும் அரண்மனை 4 ஷூட்டிங்.. புகைப்படம் வெளியிட்ட நடிகை!

வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (07:55 IST)
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2014ல் துவங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து வெளியேறி, சுந்தர் சி யே கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் விஜய் சேதுபதிக்கு இப்போது மார்க்கெட் குறைந்துள்ளதால் சம்பளத்தைக் கறாராக குறைத்து பேசினாராம் சுந்தர் சி. ஆனால் அதற்கு விஜய் சேதுபதி ஒத்துக் கொள்ளாததால்தான் அவர் வெளியேறியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகிகளாக தமன்னா மற்றும் ராஷி கண்ணா நடித்து வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்