தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது, காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில்,தன் 10 வருடங்களுக்கு மேலான சினிமா வாழ்க்கையில், இடத்தனைந்தூரம் வருவேன் என்று நினைக்கவில்லை. ஆனால், இன்று இப்போது என்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சினிமாவில், கதாநாயகி ஒரு ஆபத்தில் மாட்டிக்கொள்ளும்போது, ஒரு ஹீரோ வந்து காப்பாற்றும் வழக்கமான கதையை தேர்வு செயயாமல், வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமாவில் தைரியமான கேரக்டர்களில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.