ஹாலிவுட் ஸ்டைலில் விடாமுயற்சி : மீண்டும் வெளிநாடு பறந்த அஜித்குமார்

வியாழன், 30 நவம்பர் 2023 (20:18 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். துணிவு படத்தின் வெற்றிக்குப் பின்னர் மகிழ்திருமேனி படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வந்தது. இதில்,   அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டனர்.

இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் கடந்த மாதம்தான் தொடங்கி தொடங்கி நடந்து வந்த நிலையில்,
விடாமுயற்சி ஷூட்டிங்கை திடீரென நிறுத்திவிட்டு அஜித் உள்ளிட்ட படக்குழு சென்னை திரும்பியதாக தகவல் வெளியாகிறது.  

ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், இந்த நிலையில், 2 வது  கட்ட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள அஜித்குமார் அஜர்பைஜன் புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படம் ஹாலிவுட் ஸ்டைலில் உருவாவதால், அஜர்பைஜானில் முழு படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்