திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக் கூறிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை காவல்துறை அவருக்கு நேரடியாக அழைத்து விசாரிக்கும் வகையில் 41 ஏ எனப்படும் நோட்டீஸை அனுப்பியதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திரிஷா வீட்டிற்குச் சென்ற போலீஸார், திரிஷாவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், நடிகை திரிஷா பற்றி சர்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட முன்ஜாமீன் கோரி நடிகர் வழக்கில் மன்சூர் அலிகான் மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதில், மன்சூர் அலிகான் தரப்பில், திரிஷா சார்பில் எந்தப் புகாரில் அளிக்கப்படாத நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில், நடிகை திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தொடர்பாக மன்சூர் அலிகான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன் ஜாமீன் கேட்டு மன்சூர் அலிகான் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.