விடாமுயற்சி ‘சாவடிக்கா’ பாடல் வெளியானது.. லிரிக் வீடியோவுக்கு வெயிட் பண்ணுங்க! - அனிருத் கொடுத்த அப்டேட்!

Prasanth Karthick
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (13:28 IST)

அஜித் நடித்து மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் ‘சாவடிக்கா’ பாடல் தற்போது ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியானது.

 

 

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி. இதில் த்ரிஷா, ரெஜினா கஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட காலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் படப்பிடிப்பில் இருந்து வந்த விடாமுயற்சி தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் அதிகமான பார்வைகளை பெற்று பெரும் வைரலானது.

 

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் சிங்கிளான ‘சாவடிக்கா’ பாடல் வெளியாகியுள்ளது. பொதுவாக படத்தின் முதல் சிங்கிளின் லிரிக் வீடியோவும், ஸ்ட்ரீம் தள பாடல்களும் ஒன்றாக வெளியாகும். ஆனால் விடாமுயற்சி ‘சாவடிக்கா’ பாடல் தற்போது ஸ்பாட்டிஃபை, கானா உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகியுள்ளது. லிரிக் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்