அற்புதம் அம்மாள் வாழ்க்கையை வெப் சீரிஸாக எடுக்கும் வெற்றிமாறன்.. லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (08:52 IST)
அசுரன் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறனின் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்க ஆசைப்பட ஆரம்பித்துள்ளனர். தற்போது விடுதலை படத்தை இயக்கி முடித்துள்ள வெற்றிமாறன், சூர்யா, விஜய் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு கதைக் கூறி சம்மதம் வாங்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தான் ஒப்புக்கொண்ட படங்களை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு ஒரு கனவுப்படத்தை இயக்கும் ஆசையில் இருக்கிறாராம் வெற்றிமாறன்.

இந்நிலையில் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் 30 ஆண்டுகளாக அவரை சிறையில் இருந்து விடுவிக்க போராடிய அவரின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அதை வெப் சீரிஸாக வெற்றிமாறன் தயாரிக்க, அவரின் உதவி இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்