அரங்கம் அதிரட்டுமே.. விசிலு பறக்கட்டுமே! "கூலி" திரைப்படத்தின் கொண்டாட்டம்

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (19:44 IST)

கூலி படத்தின் மனதைக் கவரும் கொண்டாட்டத்தின் ஒரு அதிரடியான முன்னோட்டம் நட்சத்திரங்களுடனான விழா.

 

ஆரவாரமான ரசிகர்கள் மற்றும் தொழில்துறை ஜாம்பவான்கள் பங்கேற்ற இந்த விழா,  ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதை விடவும், மிகப்பெரியக் கொண்டாட்டமாக கூலி படத்தின் கவுண்டவுன் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது.

 

இந்த விழா உலகெங்கிலும் உள்ள தென்னிந்திய திரைப்பட ஆர்வலர்கள் கண்டுக்களிக்கும் வகையில் Sun NXT, இல் ஒளிபரப்பாகிறது.

 

ரெட் கார்பெட் துவங்கிய தருணத்திலிருந்தே, உற்சாகம் துவங்கி விட்டது. ரசிகர்களின் காதைப் பிளக்கும் ஆரவாரத்துடன் நட்சத்திரங்கள் விழா அரங்கிற்குள் நுழைந்தனர். 

 

இசை அரங்கம் முழுக்க அதிரும் பலத்துடன் ஒலித்தது, மேலும் கூலி படத்தில் உழைத்த  பிரபலங்கள் கலைஞர்கள், கூலி படத்தின் இசை மற்றும் படத்தின் மாயாஜாலத்தைக் கொண்டாட மேடை ஏறியதும், ரசிகர்கள் மத்தியில்  உற்சாகம் கரை புரண்டு ஓடியது. 

 

இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ருதி ஹாசன் படத்தில் பணிபுரிந்த தருணங்களை மற்ற நடிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் நடிகர் சத்யராஜ்,  நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்றியது குறித்து நினைவு கூர்ந்தார். 

 

இந்தியா முழுவதும் ஏற்கனவே இசை  தரவரிசையில் முன்னணி இடம்பிடித்த அனிருத்தின் கூலி ஆல்பம், அரங்கை அதிர வைத்தது. சௌபின் ஷாஹிர் மோனிகா பாடலுக்கு நடனமாட, கூட்டம் உற்சாகக் கூக்குரல் எழுப்பியது.

 

தெலுங்கு ஐகான் நாகார்ஜுனா, ஒரு ஹீரோவின் வரவேற்போடு அரங்கில் நுழைந்து ரசிகர்களைக் கவர்ந்தார்.  பழம்பெரும் இயக்குநர்  எஸ்பி முத்துராமன் சாரின் இதயப்பூர்வமான பேச்சு, ரஜினிகாந்த் வெறும் நட்சத்திரம் அல்ல - அவர்  நம்மில் நிறைந்திருக்கும்  ஒரு உணர்வு என்பதை நமக்கு நினைவூட்டின.

 

நீங்கள் தமிழ் பிளாக்பஸ்டர்கள், தெலுங்கு ஆக்‌ஷன் படங்கள், மலையாள கிளாசிக் படங்கள் அல்லது கன்னட வெகுஜன பொழுதுபோக்குப் படங்கள் என எதன் ரசிகராக இருந்தாலும் சரி, இந்த நிகழ்வு, வேறு எந்த நிகழ்ச்சியிலும் இல்லாத வகையில், அகில இந்திய அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாக, உங்களை மகிழ்விக்கும். 

 

இவ்விழா தனித்துவமான, உணர்ச்சிவசமான, மிகப்பெரிய நிகழ்ச்சி. இவ்விழா ஆகஸ்ட் 10, காலை 10 மணிக்கு, சன் NXT இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அதே நாள் மாலை 6:30 மணிக்கு, சன் டிவியில் முழு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகும்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்