சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.
கேரளாவில் இன்று முன்பதிவு தொடங்கியதும், ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு முன்பும், ஆன்லைனிலும் டிக்கெட்டுகளை வாங்க குவிந்தனர். திரைப்படம் A சான்றிதழ் பெற்றதால் குழந்தைகள் பார்க்க முடியாது என்றாலும், இந்தத் திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடி வசூல் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன