என் பெயரை மாற்ற நினைத்தேன்… செல்பி படவிழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (12:31 IST)
இயக்குனர் வெற்றிமாறனின் நீண்டகால நண்பரும் இயக்குனருமான மதிமாறன் இயக்கியுள்ள செல்பி படத்தின் நிகழ்ச்சியில் வெற்றிமாறன் கலந்துகொண்டார்.

ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் நடித்துள்ள செல்பி படம் விரைவில் ரிலிஸ் ஆக உள்ளது. ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்து வரும் திரைப்படத்திற்கு செல்பி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை வெற்றிமாறனின் இணை இயக்குனரும் அசுரன் படத்தின் திரைக்கதை எழுத்தாளருமான மதிமாறன் இயக்கியுள்ளார்.

மதிமாறனும் வெற்றிமாறனும் சிறு வயது முதல் நண்பர்கள். இந்த விழாவில் பேசிய வெற்றிமாறன் ‘எனக்கு வெற்றிமாறன் என பெயர் வைத்தது மதிமாறனின் தந்தைதான். பொல்லாதவன் சமயத்தில் இந்த பெயரை மாறன் என மாற்றிக் கொள்ளலாமா என யோசித்தேன்’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்