விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்குக் கதை எழுதும் வெற்றிமாறன்!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (08:01 IST)
சமீபகாலமாக விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் எந்த படமும் வெற்றி பெறவில்லை. ஆனால் அவர் வில்லனாக நடிக்கும் படங்கள் அமோக வெற்றி பெறுகின்றன. கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த DSP படம் அட்டர் ப்ளாப் ஆனது. இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், மற்றும் ரஜினி முருகன் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கி இருந்தார்.

ஆனால் இந்த படம் படுதோல்வி அடைந்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வி அடைந்த நிலையிலும் இப்போது இயக்குனர் பொன்ராம் மீண்டும் தன்னுடைய அடுத்த படத்த்தை விஜய் சேதிபதியை வைத்தே இயக்க உள்ளாராம். அதற்கு விஜய் சேதுபதியும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

அதற்குக் காரணம் இந்த படத்துக்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதிக் கொடுத்துள்ளதுதானாம். இப்போது வெற்றிமாறன் மற்ற இயக்குனர்களின் படங்களுக்கும் அதிகளவில் கதை எழுதிக் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்