கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக் ‘800’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி முதலில் இந்த படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் பின்னர் அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிடவே, இப்போது ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் வில்லனாக நடித்த மதுர் மிட்டல் இந்த படத்தில் முரளிதரன் வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நடந்து முடிந்தது. படத்தில் முக்கிய வேடத்தில் மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ் ஆகியோர் நடிக்க இயக்குனர் ஸ்ரீபதி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது.