வெந்து தணிந்தது காடு… இசை உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (15:56 IST)
வெந்து தணிந்தது காடு படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

நடிகர் சிம்பு தனது திரையுலக வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸில் இருக்கிறார். இதையடுத்து அவர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்