GOAT படத்தின் அப்டேட்களை வாரியிறைத்த இயக்குனர் வெங்கட் பிரபு!

vinoth
செவ்வாய், 5 மார்ச் 2024 (07:56 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பலகட்டமாக நடந்து வரும் நிலையில் தற்போது சென்னை தாம்பரத்தில் நடந்து வருகிறது. இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடக்க உள்ளதாக சொல்லப்பட்டது. படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் இயக்குனர் வெங்கட்பிரபுவை சமூகவலைதள பக்கத்தில் நச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்துள்ள ஜெ பேபி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெங்கட்பிரபு கலந்துகொண்டு பேசும் போது GOAT படத்தின் அப்டேட்களைக் கொடுத்துள்ளார். அதில் “இந்த மாத இறுதியில் க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு விடும். அதன் பிறகு ஒரு வெளிநாட்டு ஷெட்யூல் உள்ளது. படம் ரீமேக் எல்லாம் கிடையாது. சொந்தக் கதைதான். படத்தில் நிறைய பாடல்கள் உள்ளன. ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். படத்தில்  வி எஃப் எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நிறைய உள்ளன. அதற்காக இந்தியாவிலும் லண்டனிலும் பல இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இப்போதைக்கு ரிலீஸ் தேதி குறித்து பேச முடியாது” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்