தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பிசியாக ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில், அவர் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அதேபோல், இயக்குநராக பிசியாக இருக்கும் விக்னேஷ் சிவன் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நயன்தாரா, முதல் முறையாக ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நயன்தாரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், இயக்குநர் நாற்காலியில் விக்னேஷ் சிவனும், நடிகர் நாற்காலியில் நயன்தாராவும் உட்கார்ந்து கொண்டிருக்கும் நிலையில், சில நொடியில் இருவரும் தங்கள் இருக்கைகளை மாற்றி கொள்கின்றனர். அதாவது, இயக்குநர் நாற்காலியில் நயன்தாராவும், நடிகர் நாற்காலியில் விக்னேஷ் சிவனும் மாறி உட்காருகின்றனர். இதிலிருந்து நயன்தாரா ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்பதும், விக்னேஷ் சிவன் அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த படம் குறித்த மற்ற தகவல்களை விரைவில் அறிவிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து, நயன்தாரா இயக்கும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.