ராக்கி படத்தின் மூன்றாவது டீசர் வெளியீடு! இணையத்தில் வரவேற்பு!

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (12:25 IST)
நடிகர் வசந்த் ரவி இயக்கத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள ராக்கி படத்தின் மூன்றாவது டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது அடுத்த படமாக நடித்து வந்த ராக்கி படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்த படத்தில் வசந்த்ரவியோடு பாரதிராஜா, ஜெயக்குமார், ரவினா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் விநியோக உரிமையை விக்னேஷ் சிவன் வாங்கி வெளியிட உள்ளார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ராமு கலை இயக்குனராகவும் பொறுப்பேற்றுள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இப்போது இந்த படத்தின் மூன்றாவது டீசர் வெளியாகியுள்ளது. நாட்டுக்குப் போகலாம் என்ற இந்த டீசர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்