ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என இன்று திருட்டு கதை வழக்கு சில சமரச நடவடிக்கைகளுடன் முடிவுக்கு வந்தது.
சர்கார் கதை முருகதாஸுடைய கதையல்ல, இணை இயக்குனர் வருண் ராஜேந்திரனின் கதை கூறி படத்திற்கு தடை விதிக்கும்படி கூறப்பட்டது. இதனை இயக்குனர் பாக்யராஜ் அறிக்கை மூலம் உறுதி செய்தார். முருகதாஸ் இதை மறுத்து இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றது.
இந்நிலையில், இன்று படத்தை வெளியிட வேண்டும் என்ற காரணத்தால், முருகதாஸ் தரப்பு வருணுக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவும் ஒப்புக்கொண்டுள்ளது. அதேபோல் படத்தின் டைட்டில் கார்டில் கதைக்கு நன்றி வருண் என்ற வரிகள் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தற்போது சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வருணும் இந்த கதையை விஜய்க்காக எழுதினாராம். அப்போது அவர் பிரபலமாகாத இயக்குனர் என்பதால் படத்தை பற்றி அப்போது கூறவில்லையாம்.
மேலும், வருண் விஜய்யை விரைவில் சந்திக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவலும் வெளியாகியுள்ளது. அப்படியே வருண் விஜய்யை சந்தித்தாலும், அது மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.