கௌதம் மேனனின் அடுத்த படத்தில் ‘பிகில்’ நடிகைதான் நாயகி

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (16:29 IST)
கௌதம் மேனனின் அடுத்த படத்தில் ‘பிகில்’ நடிகைதான் நாயகி
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தற்போது ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்களை இயக்கி கொண்டிருந்தாலும் அவர் நடிப்பிலும் அவ்வப்போது கவனம் செலுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் வெளியான ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற வெற்றிப் படத்தில் கௌதம் மேனன் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் அவரது கேரக்டர் படத்தின் விறுவிறுப்பை கூட்டியது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டாலும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பிரபல இயக்குனர் வெற்றி மாறனிடம் உதவியாளராக இருந்த மதிமாறன் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று தெரிகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளார். விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடித்த வர்ஷா பொல்லம்மா தான் இந்த படத்தின் நாயகி என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் லாக்டவுன் முடிந்தவுடன் படக்குழுவினர்களால் உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஜீவி பிரகாஷ் உடன் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ள வர்ஷா பொல்லம்மாவுக்கு இந்த படம் ஒரு ஜாக்பாட் என்றே கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்