கதை முன்னாடி போகுதா? பின்னாடி போகுதா? – நோலனின் “டெனட்” ட்ரெய்லர்!

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (15:17 IST)
உலக நாடுகள் முழுவதும் பல ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனின் “டெனட்” படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படங்கள் கதைகளே புரிந்து கொள்ள சற்று சிரமப்பட கூடிய வகையிலானவை. பிரபல டிசி காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான பேட்மேனை மையப்படுத்தி இவர் எடுத்த ட்ரையாலஜி படங்கள் இந்திய ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. அதை தாண்டி இண்டெஸ்டெல்லார், இன்செப்ஷ, டன்கிர்க் ஆகிய படங்கள் உலக சினிமா ஆர்வலர்களால் பெரிதும் விரும்பப்பட்டவை.

டன்கிர்க் படத்திற்கு பிறகு நோலனின் அடுத்தப்படமாக வெளிவர இருக்கிறது டெனட். கதையில் முன்னும் பின்னும் நகர்ச்ந்து செல்லும் காட்சிகள் பார்வையாளர்களை ஈர்த்துள்ள அதேசமயம் என்ன கதை என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சிக்கலையும் ஏற்படுத்துகிறது.

ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தின் சில காட்சிகளை கிறிஸ்டோபர் நோலன் இந்தியாவில் படம் பிரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 17ம் தேதி வெளியாக உள்ள, முன்னும் பின்னும் சென்று குழப்பும் டெனட் திரைப்படத்தின் ட்ரெய்லர் கீழே..!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்