ஓடிடி, சேட்டிலைட் வியாபாரத்தை முடிக்காமலேயே ரிலீஸ் செய்யும் வணங்கான் படக்குழு!

vinoth
வியாழன், 9 ஜனவரி 2025 (08:25 IST)
கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் பாலாவுக்கு அவரது திரையுலக வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய வர்மா திரைப்படம் திருப்திகரமாக இல்லை எனக் கூறப்பட்டு வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் இயக்கி வெளியிட்டார்கள். அதன் பின்னர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொள்ள அதுவும் அடுத்த அடியாக அமைந்தது.

அதன்  பின்னர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரிக்க படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் மேல் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்த படம் நாளை ரிலீஸானாலும் இதுவரை ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை விற்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. சமீபகாலமாக மீடியம் மற்றும் சிறு பட்ஜெட் படங்களை ஓடிடி நிறுவனங்களும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ரிலீஸுக்கு முன்னர் வாங்கத் தயங்குகின்றன. அந்த வகையில் இவ்விரு உரிமைகளும் விற்கப் படாமலேயே வணங்கான் படத்தை தயாரிப்பு நிறுவனம் தியேட்டரில் ரிலீஸ் செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்