வலிமை படத்தின் முதல் நாள் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்- இப்போதே போர்டு வைத்த திரையரங்குகள்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (15:19 IST)
வலிமை படத்தின் முன்பதிவுகள் தொடங்கிவிட்ட நிலையில் பல திரையரங்குகள் முதல்நாள் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டதாக போர்டு வைத்துவிட்டனர்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. கடைசியாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகிறது. அஜித் என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுவரை அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்த எந்த படமும் பெரிய வெற்றி பெற்றதில்லை என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் இந்த படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பல திரையரங்குகளில் முதல் நாள் அனைத்துக் காட்சிகளுக்குமான டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக திரையரங்குகள் வெளியே ஹவுஸ்ஃபுல் போர்ட் வைக்க ஆரம்பித்துள்ளன. கொரோனா மூன்றாம் அலையால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தியேட்டர்களில் ரிலிஸான எந்த படமும் வெற்றிப் பெறவில்லை. இந்நிலையில் இப்போது வலிமை மூலம் மீண்டும் ரசிகர்கள் திரையரங்குக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளது திரையுலகினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்