திருக்குறளுக்கு உரை எழுதியுள்ள வைரமுத்து… தலைப்பை வெளியிட்டு நெகிழ்ச்சி!

vinoth

வியாழன், 22 மே 2025 (09:57 IST)
தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் கோலோசிய பாடல் ஆசிரியராக இருந்தவர் வைரமுத்து. ஆனால் சமீபகாலமாக அவருக்கு பாடல் வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லை. அதற்கு வைரமுத்து பாடகி சின்மயியால் மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளானதும் ஒரு காரணம். இதன் காரணமாக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் அவரை விட்டுப் பிரிந்தனர்.

அதனால் அவர் இப்போது இலக்கியம், தனி ஆல்பம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில் அவர் முகநூலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். அடிக்கடி தன்னுடைய மலரும் நினைவுகளை முகநூல் வாயிலாக பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த உரை புத்தகத்துக்கு “வள்ளுவர் மறை, வைரமுத்து உரை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த புத்தகம் வெளியாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்