மீராமிதுன் விவகாரத்தில் சூர்யாவின் அணுகுமுறை: வைரமுத்து பாராட்டு

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (11:21 IST)
கடந்த சில நாட்களாகவே விஜய் மற்றும் சூர்யா மீது நடிகை மீராமிதுன் கடுமையான விமர்சனங்கள் உடன் கூடிய வீடியோவை பதிவு செய்து வருகிறார் என்றும் அவருடைய ஒவ்வொரு டுவீட்டிலும் இருவரையும் படு கேவலமாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே 
 
மீராமிதுனின் இந்த விமர்சனத்துக்கு விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நேற்று நடிகர் சூர்யா இது குறித்து பதிவு செய்த டுவிட் ஒன்றில் இதுபோன்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தி எனது தம்பி தங்கைகளாகிய ரசிகர்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தனது நாகரீகமான பாணியில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.
 
இந்த ட்வீட்டுக்கு பாராட்டு தெரிவித்துள்ள கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
சுமத்தப்பட்ட பழியின்மீது
சூர்யாவின் அணுகுமுறை நன்று.
பக்குவப்பட்டவர்கள் 
பதற்றமுறுவதில்லை;
பாராட்டுகிறேன்.
நதியோடு போகும் நுரையோடு
கரை கைகலப்பதில்லை

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்