‘வடிவேலு அண்ணன் அந்த மாதிரிக் கதாபாத்திரங்கள் எல்லாம் நடிக்கக் கூடாது’… சுந்தர் சி அட்வைஸ்!

vinoth

சனி, 26 ஏப்ரல் 2025 (08:35 IST)
’கேங்கர்ஸ்’ படத்தின் மூலம் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதில் வடிவேலு பழைய நகைச்சுவை மன்னனாக கம்பேக் கொடுப்பார் என டிரைலர் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் ஓடிடி வியாபாரம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றுப் படம் ரிலீஸான நிலையில் வழக்கம் போல பெரிய அளவில் நேர்மறையான விமர்சனம் கிடைக்கவில்லை. ஆனால் சுந்தர் சி படங்களுக்கு என்றுதான் நல்ல விமர்சனம் வந்துள்ளது?. ரசிகர்கள் மத கஜ ராஜா படத்தை எல்லாம் பார்த்துக் கொண்டாடவில்லையா?. அந்த வகையில் இந்த படத்துக்கு முதல் நாள் வசூல் கணிசமாக இருந்துள்ளது. முதல் நாளில் இந்த படம் தமிழக அளவில் சுமார் 60 லட்ச ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன்களில் சுந்தர் சியும் வடிவேலுவும் கலந்துகொண்டு பேசி வருகின்றனர். அப்போது சுந்தர் சி வடிவேலு பற்றி பேசும் போது “நான் இதை சொன்னால் வடிவேலு அண்ணன் கோபித்துக் கொண்டாலும் கொள்வார். ஆனாலும் நான் சொல்கிறேன். அவர் சமீபத்தில் ஒரு படத்தில் குணச்சித்திரக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அதில் நடிக்க நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் ஹ்யூமராக நடிக்கதான் ஆள் இல்லை. அதனால் அவர் நகைச்சுவைப் பாத்திரங்களில்தான் நடிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். சமீபத்தில் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் வடிவேலு நகைச்சுவை அல்லாத குணச்சித்திரப் பாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்