கேங்கர்ஸ் படத்தின் மூலம் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதில் வடிவேலு பழைய நகைச்சுவை மன்னனாக கம்பேக் கொடுப்பார் என டிரைலர் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் ஓடிடி வியாபாரம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் படம் ரிலீஸான நிலையில் வழக்கம் போல பெரிய அளவில் நேர்மறையான விமர்சனம் கிடைக்கவில்லை. ஆனால் சுந்தர் சி படங்களுக்கு என்றுதான் நல்ல விமர்சனம் வந்துள்ளது?. ரசிகர்கள் மத கஜ ராஜா படத்தை எல்லாம் பார்த்துக் கொண்டாடவில்லையா?. அந்த வகையில் இந்த படத்துக்கு முதல் நாள் வசூல் கணிசமாக இருந்துள்ளது. முதல் நாளில் இந்த படம் தமிழக அளவில் சுமார் 60 லட்ச ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்பட்டது.
அதன்பின்னர் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லையாம். இதற்கிடையில் நாளை சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி ஆகிய படங்கள் ரிலீஸாகும் நிலையில் கணிசமான திரையரங்குகளில் இருந்து கேங்கர்ஸ் திரைப்படம் தூக்கப்படும் என சொல்லப்படுகிறது.