மாமன்னன் படத்த்தின் வெற்றிக் கூட்டணியான பகத் பாஸில் மற்றும் வடிவேலு மீண்டும் இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் சுதேஷ் சங்கர் என்பவர் இயக்கி வருகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் கடந்த ஆண்டு நடந்து முடிந்த நிலையில் தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.