யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 13 -வது இடத்தைப் பிடித்த கபாலி

Webdunia
திங்கள், 25 ஜூலை 2016 (09:59 IST)
கபாலி திரைப்படம் யுஎஸ்ஸில் பிரமாண்டமாக வெளியானது. படத்தின் ப்ரீமியர் காட்சிகளில் மட்டும் 13 கோடிகளை படம் வசூலித்ததாக, படத்தை யுஎஸ்ஸில் வெளியிட்ட சினி கேலன்சி அறிவித்தது.


 
 
முதல்வார இறுதியில் கபாலி யுஎஸ் பாக்ஸ் ஆபிசில் 13 -வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் மூன்று தினங்களில் யுஎஸ்ஸில் கபாலி 2.157 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ப்ரீமியர் காட்சிகளையும் சேர்த்தால் 4.083 மில்லியன் டாலர்கள். நமது ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 25 கோடிகள்.
 
முதல் மூன்று தினங்களில் இப்படியொரு வசூலை எந்த தமிழ்ப் படமும் இதுவரை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்