ரெய்டில் சிக்கிய கணக்கில் வராத ரூ.200 கோடி...சினிமா துறையினர் அதிர்ச்சி

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (17:47 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்பட ஒரு சில முக்கிய தயாரிப்பாளர்களின் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  நேற்று நான்காவது நாளாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு,அன்புசெழியன்  உள்பட ஒரு சில தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்வதாக தகவல் வெளியானது.

இந்த சோதனையில் குறித்து, வருமான வரிசோதனை வெளியிட்ட அறிக்கையில், வருமான வரிச்சோதனையில், கணக்கில் வராத ரூ. 200 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பணமாக ரு.36 கோடியும், தங்கம் வெள்ளி உள்ளிட்டவை ரூ.3 கோடி மதிப்பிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தயாரிப்பாளர் அன்புச் செழியனுக்குச் சொந்தமாக இடங்கள் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இருந்து  தியேட்டர் வருமானத்தைக் குறைத்து, பல கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும்,  பல நிறுவனங்களுக்கு கொடுத்த கணக்கில் வராத கடன் கள், பத்திரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்திற்கு அன்புச்செழியன் பைனான்ஸ் செய்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை உதய  நிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்