அந்தகன் கைப்பற்றிய முன்னணி தயாரிப்பாளர்… செம்மயா மார்க்கெட்டிங் பண்ணுவாரே!

புதன், 2 மார்ச் 2022 (16:33 IST)
பிரசாந்த் நடிப்பில் அவரின் தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படத்தை கலைப்புலி தாணு தன்னுடைய வி கிரியேஷன்ஸ் மூலமாக வெளியிடுகிறார்.

பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் தயாரிப்பில் உருவாகிவரும் ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை தியாகராஜனே இயக்கியுள்ளார். இந்த படம் சில வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு மற்றும் ராதிகா ஆப்டே நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அந்தாதூன் படத்தின் ரீமேக் ஆகும்.

நீண்ட நாட்களாக பீல்டில் இல்லாத பிரசாந்த் இந்த படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனை அமையும் என எதிர்பார்த்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில் ரிலிஸூக்கு காத்திருக்கிறது. இந்நிலையில் தமிழின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி தாணு தன்னுடைய வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை வெளியிட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்