இயக்குனர் பாலா தன் நண்பர் விக்ரம்முக்காக அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தை வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் அந்த படம் விக்ரம்முக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் திருப்தி இல்லாததால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என முடிவெடுத்தனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் வேறு இயக்குனரால் எடுக்கப்பட்டது இல்லை. சீனியர் இயக்குனரான பாலாவுக்கு இது மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த படத்தை பெரிய வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளாராம். இப்போது அவர் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்துக்கான வேலைகள் இப்போது தொடங்கியுள்ளன. இந்த படத்தில் கதாநாயகிகளாக நடிக்க நாச்சியார் பட நாயகி இவானா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றாராம்.