கடந்த வருடம் சசிகலா குறிந்த படம் இயக்கப்போவதாகக் கூறினார்.
இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் பணிக்குச் சென்றுவிட்டு, ஸ்கூட்டியில் தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த ஒரு கால்நடை மருத்துவரை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்து ,.மனிதநேயமின்றி எரித்துகொன்றனர். இவர்கள் 5 பேரும் அதே இடத்தில் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் ராம்கோபால் வர்மா திஷா என்கவுண்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால், இப்படத்தைத் தடை செய்ய வேண்டுமென்று, திஷாவின் தந்தை ஏற்கனவே நீதியமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இப்படத்தில், பாலியல் வன்கொடுமைக் காட்சியே அப்படியே எடுத்திருப்பதாகக் கூறி தணிக்கை அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், அடுத்து, ரிவைசிங் கமிட்டிக்கு இப்படத்தை ராம்கோபால் வர்மா அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.