என்னை ஏமாற்றியதற்கு நன்றி! மஞ்சள் வீரன் டிடிஎஃப் வெளியிட்ட ஆதங்க வீடியோ!

Prasanth Karthick
திங்கள், 7 அக்டோபர் 2024 (18:19 IST)

மஞ்சள் வீரன் படத்திலிருந்து டிடிஎஃப் வாசனை நீக்குவதாக இயக்குனர் செல்அம் அறிவித்திருந்த நிலையில் அதுகுறித்த வீடியோ ஒன்றை டிடிஎஃப் வாசன் தற்போது வெளியிட்டுள்ளார்.

 

 

2கே கிட்ஸின் விருப்பமான யூட்யூபரான டிடிஎஃப் வாசன் பல பைக் சாகசங்களை செய்து வீடியோ வெளியிட்டு அதனால் சர்ச்சைக்குள்ளாகி பல வழக்குகளையும் சந்தித்தார். இவர் நடித்து இயக்குனர் செல்அம் என்பவர் இயக்கத்தில் ‘மஞ்சள் வீரன்’ என்ற படம் தயாராவதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய இயக்குனர் செல்அம், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்படுவதாகவும், புதிய ஹீரோ அக்டோபர் 15 அன்று அறிவிக்கப்படுவார் என்றும் அறிவித்தார். இந்த படம் வாழ்வியல் சார்ந்த கதை என்பதால் டிடிஎஃப் தன்னுடன் முழுவதும் பயணிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும், ஆனால் அவரால் அது முடியாததால் இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும், இதை டிடிஎஃப் வாசனிடமே இன்னும் சொல்லவில்லை என்றும் செல்அம் கூறியிருந்தார்.
 

ALSO READ: பிக்பாஸ் வீட்டை விட்டு 24 மணி நேரத்தில் வெளியேறிய போட்டியாளர்.. வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்..
 

செல்அம்மின் இந்த முடிவு குறித்து டிடிஎஃப் வாசன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “மஞ்சள் வீரன் படத்திலிருந்து நான் நீக்கப்பட்ட தகவலை இதுவரை இயக்குனர் செல்அம் என்னிடம் தெரிவிக்கவில்லை. நான் தொடர்பு கொண்டாலும் அவர் பேச தயாராக இல்லை. 

 

என்னிடம் சொல்லியிருந்தால் நானே ஒத்துக்கொண்டு படத்திலிருந்து வெளியேறி இருப்பேன். ஆனால் படப்பிடிப்பு நடத்தாமலே நான் அதற்கு வரவில்லை என்று நேரடியாக செய்தியாளர் சந்திப்பு நடத்தி அதில் சொல்வது பெரிய தவறு. அண்ணன் அண்ணன் என்று சொல்லிக் கொண்டு என்னை வைத்து மலிவான விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். இதுபோன்ற பச்சை துரோகத்தை நான் என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்