மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?

vinoth

புதன், 2 அக்டோபர் 2024 (10:53 IST)
யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அவர் நடிக்கும் மஞ்சள் வீரன் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. கையில் சூலத்தோடு பைக் ஓட்டிக்கொண்டு ஆக்ரோஷமாக வாசன் இருக்கும் விதமாக இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை செல்அம் இயக்கிவந்தார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி சில நாட்கள் மட்டும் நடந்தது. இதற்கிடையில் இயக்குனர் செல்அம் வாசன்தான் “அடுத்த சூப்பர் ஸ்டார்” என்றெல்லாம் பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி படத்தில் இருந்து வாசனை நீக்கிவிட்டோம் என அறிவித்துள்ளார். அதற்கான காரணமாக அவர் சொன்னது “தம்பி நம்ம கூட ட்ராவல் பண்ணுவார்னு நெனச்சேன். ஆனால் அவர் ட்ராவல் வேற மாதிரி இருக்கு. அவருக்கு படத்துல ஈடுபாடு இல்லை. அதனால அவருக்குப் பதில் ஒரு வேற ஒரு ஹீரோ போட்டுள்ளோம். இதுவரை 35 சதவீதம் ஹீரோ இல்லாதக் காட்சிகளை எடுத்துள்ளோம். அக்டோபர் 15 ஆம் தேதி புது ஹீரோ யார் என்பதை அறிவிப்போம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்