ஏ.வி ராஜூவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய த்ரிஷா .. நிபந்தனையற்ற மன்னிப்பு மற்றும் நஷ்ட ஈடு..!

Mahendran
வியாழன், 22 பிப்ரவரி 2024 (14:07 IST)
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று த்ரிஷா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை திரிஷா குறித்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்த நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு கண்டனம் தெரிவித்தது.

இதனை அடுத்து அவர் மன்னிப்பு கேட்ட போதிலும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல திரையுலக பிரமுகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகை த்ரிஷா தரப்பில் இருந்து ஏவி ராஜுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில் முன்னணி ஊடகம் மூலம் ஏவி ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதன் பின்னர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இதுபோன்ற நபர்களுக்கு த்ரிஷா எடுத்த சரியான நடவடிக்கை என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்