நான் அப்படி சொல்லவே இல்லை.. கூவத்தூர் - த்ரிஷா விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த ஏ.வி.ராஜூ..

Siva

புதன், 21 பிப்ரவரி 2024 (07:14 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் த்ரிஷா  குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரையுலகினர் கொந்தளித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஆர்கே செல்வமணி, விஷால், சேரன், மன்சூர் அலிகான் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் த்ரிஷாவும் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய பேட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏவி ராஜு , தற்போது தான் த்ரிஷா குறித்து எதுவும் சர்ச்சைக்குரிய வகையில் சொல்லவே இல்லை என அந்தர் பல்டி அடித்துள்ளார்.

அவர் இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் 'கூவத்தூர் விவகாரத்தில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், த்ரிஷா மாதிரி அழகான பெண் வேண்டும் என்றுதான் என்னிடம் கேட்டார் என்று கூறினேன், நான் த்ரிஷா குறித்து கூறியதாக திரித்துவிட்டார்கள் இதுகுறித்து த்ரிஷா மனம் காயப்பட்டு இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த விவகாரத்தை திரையுலகினர் அவ்வளவு லேசில் விட மாட்டார்கள் என்றும் ஏவி ராஜூ மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்