இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர்.
எப்போது,இந்தப் பிரமாண்ட படம் ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இப்படத்தில் நடித்த நடிகர்கள் தம் சமூக வலைதளப் பக்கத்தில், இப்பட அனுபவம், மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு வருவதும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன்- பட ஷூட்டிங் ஸ்பாட்டில், குந்தையாக நடித்துள்ள த்ரிஷாவும், நந்தினியாக நடித்துள்ள முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாவும் எடுத்துக் கொண்ட செஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது.