ஜானுவுக்கு 6 விருதுகள்: திரிஷா ஹேப்பி அண்ணாச்சி

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (17:04 IST)
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 96. இந்த படம் 100 நாள் ஓடி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
96, காதல் படமாக இருந்தாலும் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது. குறிப்பாக ராம், ஜானு கேரக்டர்களை இன்னும் சில ஆண்டுகளுக்கு ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.
 
இந்த படம் திரிஷாவின் சினிமா பயணத்தில் முக்கிய படமாக இருக்கும். எப்படி விண்ணைதாண்டி வருவாயோ ஜெஸ்ஸியை மறக்க முடியாதோ அதே போல் 96 ஜானுவையும் மறக்க முடியாது. 
 
இந்த படத்திற்காக மட்டும் திரிஷா இதுவரை ஆறு விருதுகளை பெற்றுவிட்டாராம். 6 விருதுகளுடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை திரிஷா தனது டிவிட்டர் பக்த்தில் வெளியிட்டுள்ளார். 
 
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலர் திரிஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்