த்ரிஷாவுடன் இரவு பார்ட்டியில் பிக்பாஸ் சுரேஷ் அங்கிள்: வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (20:16 IST)
த்ரிஷாவுடன் இரவு பார்ட்டியில் பிக்பாஸ் சுரேஷ் அங்கிள்
கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சுரேஷ் சக்கரவர்த்தியை பலருக்கு தெரிந்திருக்காதுல் இருந்தாலும் அவர் யூடியூப் சேனலில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடத்திய சமையல் நிகழ்ச்சிகள் பெரும் புகழ்ப் பெற்றன 
 
இந்த நிலையில் தற்போது அவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இரண்டாவது நாளே அவர் அனிதா சம்பத்துடன் மோதியது அனைவரையும் பரபரப்பாக்கியது இப்பொழுது வரை அவர்தான் அனைத்து புரமோ வீடியோவிலும் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த சுரேஷ் சக்ரவர்த்தி யார் என்று பார்வையாளர்கள் கூகுளில் தேடிப் பார்த்தபோது அவர் திரிஷாவுடன் ஒரு இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்டு ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் தெரிய வந்துள்ளது. இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் அதிக அளவில் பகிர்ந்து வருவதால் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்