ரஜினி, கமல், அஜித்துடன் ஒரே நேரத்தில் நடிக்கும் நடிகை?

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (13:42 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளிவந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், சம்பளம் மற்றும் கால்ஷீட் தேதிகள் குறித்த பேச்சுவார்த்தை மட்டுமே இன்னும் மீதமிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினியுடன் நயன்தாரா, சந்திரமுகி என்ற படத்தில் ஜோடியாகவும், சிவாஜி, குசேலன் படங்களில் பாடல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் ரஜினிக்கு அவர் ஜோடியாக நடிப்பு தேடி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கமல்ஹாசனின் 'இந்தியன் 2', அஜித்தின் 'விசுவாசம்' ஆகிய படங்களில் நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்போது ரஜினி படமும் உறுதியானால் ரஜினி, கமல், அஜித் ஆகிய மூவரின் படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்கும் நடிகை என்ற பெருமையை அவர் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்