விஜய் டிவியில் இன்று ஒரு நாள் சீரியல்கள் நிறுத்தம்: என்ன காரணம்?

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (16:06 IST)
விஜய் டிவியில் இன்று ஒரு நாள் சீரியல்கள் நிறுத்தம்: என்ன காரணம்?
விஜய் டிவியில் தினமும் 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்று ஒருநாள் 6 மணி முதல் 9 மணி வரை சீரியல்கள் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
விஜய் டிவியில் 6 மணி முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ், நாம்இருவர்நமக்குஇருவர், தமிழும் சரஸ்வதியும், மவுனராகம், பாக்கியலட்சுமி ஆகிய சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் இன்று ஒருநாள் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ச்சியாக மூன்று மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளது
 
இந்த சீரியல் ஆரம்பித்து 300 நாட்கள் ஆகிவிட்டதை அடுத்து சிறப்பு நிகழ்ச்சியாக இன்று மூன்று மணி நேர பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. அதனால் மற்ற சீரியல்கள் நிறுத்தப்பட்டுள்ளன 
 
ஆனால் அதே நேரத்தில் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் மட்டும் வழக்கம்போல் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடதக்கது. இது குறித்த வீடியோவை விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்