ஜூலி குறித்து புரணி பேசிய நமீதா

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (23:48 IST)
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி எந்தவித விறுவிறுப்பும் இன்றி சாதாரணமாக நடந்த நிலையில் நிகழ்ச்சி முடியும் ஒருசில நிமிடங்களுக்கு முன்னர் ஜூலி குறித்த மற்ற நடிகைகள் பேசிய புரணி மட்டும் சிறிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.



 
 
ஜூலி எல்லாவற்றிலும் தானே முன்னிற்க வேண்டும் என்றும் நாமெல்லாம் அவருக்கு பேக்ரவுண்ட் டான்சர் போல இருக்க வேண்டும் என்று நினைப்பதாகவும் நடிகை ஆர்த்தி கூறினார். மேலும் ஜூலி குறித்து நமீதா கூறியபோது, 'அவள் கண்களில் ஒரு கொடூரத்தை பார்க்கின்றேன், அவள் முகம் சாதாரணமாக சிரித்த முகமாக இருந்தாலும் அவர் கண்கள் சாதாரணமாக இல்லை என்றும் அவர் கூறினார். 
 
ஏற்கனவே உடல்நிலையை காரணம் காட்டி பிக்பாஸ் குடும்பத்தில் இருந்து ஸ்ரீ வெளியேற்றப்பட்ட நிலையில் ஜூலியை விரைவில் வெளியேற்ற திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.   
அடுத்த கட்டுரையில்