தக் லைஃப் படத்தின் டிரைலர் & இசை வெளியீட்டு விழா அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

vinoth

வியாழன், 15 மே 2025 (09:22 IST)
நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் இந்த படத்தின் முதல் தனிப்பாடல் ‘ஜிங்குச்சன்’ படம் வெளியாகி வைரல் ஆனது.

இதற்கிடையில் மே 16 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடக்கும் என அறிவித்திருந்த நிலையில் ‘இந்தியா- பாகிஸ்தான்’ தாக்குதல் சம்பவத்தால் தள்ளிவைக்கப்பட்டது. இப்போது இயல்பு நிலைக்கு இரு நாடுகளும் திரும்பிவரும் நிலையில் மே 17 ஆம் தேதி டிரைலர் வெளியீட்டு விழாவும், மே 24 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடக்கவுள்ளதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்