பா.ரஞ்சித்தை அடுத்து ‘காட்மேன்’ தொடருக்கு ஆதரவு தெரிவித்த பிரபலம்

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (19:16 IST)
சமீபத்தில் ‘காட்மேன்’ என்ற வெப் தொடரின் டீஸர் வெளியான நிலையில் அந்த தொடரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் மதத்தையும் இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாக கூறி அந்த தொடரின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது போலீஸ் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்தே இந்த தொடரை ஒளிபரப்ப போவதில்லை என ஜி5 நிறுவனம் அறிவித்துள்ளது என்பதும் இந்த தொடரின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ‘காட்மேன்’ தொடருக்கு ஆதரவாக இயக்குனர் பா. ரஞ்சித் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு கமெண்டுக்கள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஞ்சித்தை அடுத்து தற்போது விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ‘காட்மேன்’ தொடருக்கு ஆதரவாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதுகுறித்து கூறியதாவது:
 
‘காட்மேன்’ தொலைக்காட்சித் தொடரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய அவதூறு செய்திருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி அதை ஒளிபரப்ப விடாமல் தடை செய்தும் அதன் தயாரிப்பாளர் இயக்குநர் ஆகியோருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டு சனாதன பயங்கரவாத கும்பல் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய போக்கை நாங்கள் கண்டிக்கிறோம். கருத்து சுதந்திரம் குறித்து உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அந்த தொடரை வெளியிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்டவர்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்’ என்று திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்