சந்திரமுகி-2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.
2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் ராதிகா, ரவி மரியா உள்ளிட்டோர் நடிக்கும் நிலையில் கதாநாயகி யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
இரண்டாம் பாகம் முற்றிலும் வேறு கதை என்றாலும் முதல் பாகத்தில் இருந்து முருகேசன் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சந்திரமுகியாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
இந்த நிலையில், இப்படத்தில், சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதை, லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில், ராகவா லாரன்ஸ்ட், வடிவேலு, ராதிகா, தோட்டாதரணி, உள்ளிட்ட பிரபலங்கள் உள்ள நிலையில், கங்கனா ரனாவத்தின் வருகை மேலும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.