இந்நிலையில் இப்போது உருவாகி வரும் இரண்டாம் பாகத்திலும் அவர் முருகேசன் என்ற அதே கதாபாத்திரத்தில்தான் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகம் முற்றிலும் வேறு கதை என்றாலும் முதல் பாகத்தில் இருந்து முருகேசன் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் இரண்டாம் கடட் ஷுட்டிங் தொடங்கியுள்ளது. விரைவில் படப்பிடிப்பை முடித்து அடுத்த ஆண்டில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் வடிவேலு, லாரன்ஸ், ராதிகாவோடு பிரபல நடிகர் ரவிமரியாவும் இடம்பெற்றுள்ளார்.