நடிகர் விஜய்யின் வெற்றியின் சீக்ரெட் இதுதான் …மாஸ்டர் தயாரிப்பாளர் ஓபன் டாக்

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (18:22 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான உள்ளவர் நடிகர் விஜய். அவரது ஒவ்வொரு படங்களும் திருவிழா போல அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அவரது நடிப்பில் வெளியான ஒவ்வொரு படங்களும் சாதனை நிகழ்த்துகிறது.

இந்நிலையில் பிரபல மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாளரும்  நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ நடிகர் விஜய்யின் வெற்றியின் ரகசியங்களாக மூன்றைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில், தனது அப்பா அம்மாவுக்கு மரியாதை கொடுத்து அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்வதும்,  எப்போதும் மாஸ்டர் பாட்டில் வருவது போன்று பாசிட்டிவாக இருப்பதும்,முடிந்தவரை மக்களுக்கு உதவி செய்வது என்ற மூன்றுதான் அவரது வெற்றியின் ரகசியம் எனத் தெரிவித்துள்ளார் சேவியர் பிரிட்டோ.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்