நடிகர் பொன்னம்பலத்துக்கு உதவி செய்த பாஜக! 2 லட்சம் நிதியுதவி!

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (17:58 IST)
சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பொன்னம்பலத்துக்கு பாரதிய ஜனதா கட்சி 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் சிறுவேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் நடிகர் பொன்னம்பலம். அதற்கு முன்பே பல படங்களில் அவர் ஸ்டண்ட் நடிகராக பணிபுரிந்திருக்கிறார். அதன் பின் பல படங்களில் நடித்த பொன்னம்பலம் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறையவே நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்தார். இதற்கிடையில் அரசியலில் ஈடுபட்ட அவர் தமிழக பாஜகவில் இணைந்தார்.

பிக்பாஸில் கலந்துகொண்ட பிறகு அவர் மீண்டும் தமிழக ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். இந்நிலையில் தற்போது சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்கு முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் இருவரும் நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில் அவர் உறுப்பினராக இருக்கும் கட்சியான பாஜக அவரது சிகிச்சை செலவுகளுக்காக 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல் முருகன் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து இந்த நிதியுதவியை அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்