விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக, அஜித் 62 படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அஜித் 62 ஆவது படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக லைககா நிறுவனம் அறிவித்தது.
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றிக்குப் பின், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் துணிவு ரிலீஸுக்குப் பின் ஜனவரி 17 ஆம் தேதி இந்த படத்தை தொடங்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவன் தரப்பில் இன்னும் ஸ்கிரிப் தயார் செய்யவில்லை என தகவல் வெளியானது.
இந்த நிலையில், அஜித் 62 படத்தை யார் இயக்குவது என்ற கேள்விகள் எழுந்த நிலையில், 'வலைப்பேச்சு' பிஸ்மி தன் டுவிட்டர் பக்கத்தில், ''அஜித்62 பட இயக்குனர் மகிழ்திருமேனி'' என்று தெரிவித்துள்ளார்.